ADDED : ஜூலை 18, 2024 12:13 AM
கோவை : மாவட்ட அளவிலான ஜூனியர் கோ-கோ போட்டியில், எம்.டி.என்., சி.பி.எஸ்.இ., பள்ளி அணி கோப்பையை தட்டிச்சென்றது.
கோவை மாவட்ட கோ-கோ சங்கம், கார்த்தி கோ-கோ சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு சப் - ஜூனியர் மற்றும் ஜூனியர் கோ கோ போட்டிகள், வரதராஜாபுரம் டி.என்.ஜி.ஆர்., பள்ளி மைதானத்தில் நடந்தது. நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியில், 40க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்றன.
வெற்றி பெற்ற அணிகள்
மாணவர்கள் பிரிவு சப் - ஜூனியரில் எம்.டி.என்., பள்ளி அணி முதலிடம், டி.என்.ஜி.ஆர்., பள்ளி அணி இரண்டாமிடம் பிடித்தன. ஜூனியர் பிரிவில் எம்.டி.என்., முதலிடம், சி.ஆர்.ஆர்., பள்ளி இரண்டாமிடம் பிடித்தன. மாணவியர் சப் - ஜூனியர் பிரிவில், எம்.டி.என்., பள்ளி முதலிடம், டி.என்.ஜி.ஆர்., இரண்டாமிடம் பிடித்தது. ஜூனியர் பிரிவில் டி.என்.ஜி.ஆர்., பள்ளி முதலிடம், எம்.டி.என்., பள்ளி இரண்டாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, பதக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
டி.என்.ஜி.ஆர்., பள்ளி தலைமையாசிரியர் சதாசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.