ADDED : மார் 29, 2024 12:46 AM
கோவை;கோவை ரத்தினபுரியை சேர்ந்த டிரைவர் ஒருவர், ரத்தினபுரி ஆறுமுக கவுண்டர் வீதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். ஒரு பெண் அவரிடம், இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி அழைத்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், ரத்தினபுரி போலீசில் அளித்த புகாரின் படி, போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.
ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, விபச்சாரம் நடத்தியதாக ரத்தினபுரியை சேர்ந்த தாமரைச்செல்வி, 31, திருப்பூரை சேர்ந்த பவித்ரா, 23, துடியலுாரை சேர்ந்த நந்தினி, 20 ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல, கோவை விமான நிலையம் சாலை பகுதியில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியதாக, கோவை வடவள்ளியை சேர்ந்த சரவணகுமார், 30, புவனேஸ்வரி, 39, சரவணம்பட்டியை சேர்ந்த அன்சாலின் பிரபா, 27, சுண்டக்காமுத்துாரை சேர்ந்த ராஜேஸ்வரி, 26, தர்மபுரியை சேர்ந்த சங்கீதா, 23 ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக உள்ள மசாஜ் சென்டரின் உரிமையாளர் கவுதம் மற்றும் ஹரிஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

