/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்'
/
'ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்'
'ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்'
'ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்'
ADDED : மார் 09, 2025 11:49 PM

கோவை; சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில், கோவை சரவணம்பட்டியில், 'அக்னி சிறகே 2025' எனும், பெண்கள் பங்கேற்ற மராத்தான் போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பரிசுகளை வழங்கினார்.
அவர் பேசியதாவது:
பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பது தான் உண்மையான சமத்துவம். சமத்துவத்தை உருவாக்க பெண்களுக்கு, முழுச்சுதந்திரம் வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் இருந்து, சுதந்திரம் கிடைக்க வேண்டும்.
பெண்கள் தங்கள் பிரச்னைகளை, பயமின்றி வெளிப்படையாக பேச வேண்டும். முழுமையான கல்வி, அனைவருக்குமான வேலைவாய்ப்பு, எல்லோருக்குமான சம உரிமை கிடைக்க, அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். அரசு துறைகளில், ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பெண்களின் வளர்ச்சிக்கு பல தடைகள் உருவாகும். அதை படிக்கற்களாக மாற்றி, வெற்றிக் கோட்டையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.