/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊழியர்களாக நியமித்தனர் பெண்களை ஷோரூமில் உயர்ந்தது கார் விற்பனை!
/
ஊழியர்களாக நியமித்தனர் பெண்களை ஷோரூமில் உயர்ந்தது கார் விற்பனை!
ஊழியர்களாக நியமித்தனர் பெண்களை ஷோரூமில் உயர்ந்தது கார் விற்பனை!
ஊழியர்களாக நியமித்தனர் பெண்களை ஷோரூமில் உயர்ந்தது கார் விற்பனை!
ADDED : ஏப் 28, 2024 01:48 AM

தொழில் துறையில் தனக்கென தனியிடம் பெற்றுள்ள கோவையில், பெண்கள் மட்டுமே பணிபுரியும் ஒரு ஷோரூம், 'அட' சொல்ல வைத்திருக்கிறது.
கோவை நவ இந்தியாவில் செயல்படுகிறது, ரமணி போக்ஸ்வேகன் ஷோரூம். 2017ம் ஆண்டு முதல் இந்த ஷோரூம் செயல்பட்டு வந்தாலும், 2022ல் ஏற்பட்டது ஒரு புது மாற்றம்.
முழுக்க, முழுக்க ஊழியர்கள் அனைவரும் பெண்களாக மாற்றப்பட்டனர். காவலாளி கூட ஒரு பெண்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
இதற்கான சரியான பணியாளர்களை தேர்வு செய்து, வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ளும் முறை, விற்பனை, விற்பனைக்கு பிந்தைய நிலை என, ஒவ்வொரு கட்டமாக இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்போது, ஏழு பெண்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் அணுகுமுறை, வாடிக்கையாளர்கள் பலரை கவர்ந்து வருகிறது.
பெண் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவது தான் ஹைலைட். விற்பனையாகும் கார்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருகிறது. இதற்காக, பல விருதுகளும் இவர்களை வந்து சேர்ந்துள்ளன.
ேஷாரூம் பொது மேலாளர் ஜெயராமனிடம் பேசினோம்...!
''டெஸ்ட் ட்ரைவ் முதல் விற்பனை வரை, அனைத்திலும் பெண்கள் இருக்க வேண்டும் என்ற எங்கள் செயல் இயக்குனர் சுதர்சன் முயற்சி, இன்று வெற்றியடைந்திருக்கிறது. இப்படித்தான் ஐதராபாத்திலும் ஒரு நிறுவனத்தினர், ஒரு ஷோரூம் துவங்கியிருக்கின்றனர். கார்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. ஷோரூம் வரும் வாடிக்கையாளர்களுக்கும் மகிழ்ச்சி,'' என்றார்.

