/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆட்டோமேஷன் புரட்சியில் பெண்களின் பங்களிப்பு
/
ஆட்டோமேஷன் புரட்சியில் பெண்களின் பங்களிப்பு
ADDED : ஏப் 27, 2024 12:57 AM
கோவை;இந்துஸ்தான் கல்விக்குழுமம் சார்பில், 'ஆட்டோமேஷன் புரட்சியில் பெண்களின் பங்களிப்பு 'என்ற கருத்தரங்கு நடந்தது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்துறை ஆட்டோமேஷன் துறையில் பாலின சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, கருத்தரங்கு நடத்தப்பட்டது. ஆட்டோமேஷன் துறையில், பெண்களின் பங்களிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்து நிபுணர்கள் பேசினர்.
தொடர்ந்து, ஐ.சி.டி., அகாடமிக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அசோசியேட் துணைத் தலைவர் சரவணன், அசோசியேட் பொது மேலாளர் அழகிரி மற்றும் இளம் பெண்களுக்கான செயற்கை நுண்ணறிவுத்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜடாலின் ஆகியோர், பாலின சமத்துவம் குறித்து உரையாற்றினர்.
பணியிடத்தில் சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் குறித்த கலந்துரையாடல் நடந்தது.கல்லுாரியின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி, செயலர் பிரியா, முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

