/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுண் பார்வையாளர்களுக்கு சுழற்சி முறையில் பணி
/
நுண் பார்வையாளர்களுக்கு சுழற்சி முறையில் பணி
ADDED : ஏப் 15, 2024 09:04 PM
- நமது நிருபர் -
ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் நுண்பார்வையாளர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி துவங்கியது.
திருப்பூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட, திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், அவிநாசி, காங்கயம் உள்ளிட்ட, 8 சட்டசபை தொகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளில், 127 ஓட்டுச் சாவடிகள் பதட்டமானவை என, அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த ஓட்டுச் சாவடிகளில், கூடுதல் பாதுகாப்பு மற்றும் நுண்பார்வையாளர்களுக்கு சுழற்சி முறையில், பணி ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் ஹிமான்சு குப்தா, கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்துக்கு, பின், நுண்பார்வையாளர்களுக்கான பணி ஒதுக்கீடு செய்யும் பணி துவங்கியது. இப்பணியை, தேர்தல் பொது பார்வையாளர் துவக்கி வைத்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

