/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீ விபத்து ஏற்பட்டு தொழிலாளி வீடு சேதம்
/
தீ விபத்து ஏற்பட்டு தொழிலாளி வீடு சேதம்
ADDED : ஆக 06, 2024 09:57 PM
வால்பாறை : வால்பாறை அடுத்துள்ள நல்லகாத்து எஸ்டேட்டை சேர்ந்தவர் ராமலட்சுமி, 50. எஸ்டேட் தொழிலாளியான இவர் நேற்று வழக்கம் போல் தேயிலை பறிக்கும் பணிக்கு சென்றார்.
காலை, 11:30 மணிக்கு பூட்டிய வீட்டில் தீ பரவியது. இதை கண்ட தொழிலாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினரும்அங்கு வந்து, வேகமாக பரவிய தீயை அணைத்தனர். இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
தகவல் அறிந்த வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கவுன்சிலர் ரவிசந்திரன், எஸ்டேட் அதிகாரிகள் நேரில் சென்று சேதங்களை பார்வையிட்டனர். வருவாய்த்துறை சார்பில், நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன.
வீட்டில் பற்ற வைத்த விளக்கை அணைக்காததால், தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.