/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உலகத்தர கிரிக்கெட் மைதானம் கோவையில் அமைக்கப்படும்'
/
'உலகத்தர கிரிக்கெட் மைதானம் கோவையில் அமைக்கப்படும்'
'உலகத்தர கிரிக்கெட் மைதானம் கோவையில் அமைக்கப்படும்'
'உலகத்தர கிரிக்கெட் மைதானம் கோவையில் அமைக்கப்படும்'
ADDED : ஏப் 09, 2024 01:16 AM

கோவை;கோவையில் உலகத்தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
கோவை தொகுதிக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பி.ராஜாவிடம் கோவையில் பெரிய விளையாட்டு மைதானம் வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா 'எக்ஸ்' வலை தளம் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அதில், கோவை தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, தடகளம், துப்பாக்கி, கார் பந்தயம், கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமுள்ள இளைஞர்களை சந்தித்தோம்.
கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் இளைஞர்களின் திறமையை வெளிக்கொணர, உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானத்தை கோவையில் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட கோரிக்கை பதிவை இணைத்து முதல்வர் ஸ்டாலின் தனது 'எக்ஸ்' பக்கத்தில் புதிய வாக்குறுதியை வெளியிட்டார். கோவையில் உலகத்தரத்திலான கிரிக்கெட் மைதானம் அங்குள்ள விளையாட்டு ஆர்வலர்களின் ஆதரவோடு அமைக்கப்படும். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டதை போல, சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தை அடுத்து, தமிழ்நாட்டின் 2வது பன்னாட்டு கிரிக்கெட் மைதானமாக இது விளங்கும்.
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியும் திறமையாளர்களை வளர்த்தெடுத்து தமிழ்நாட்டில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த உறுதியாக உள்ளார்' என குறிப்பிட்டுள்ளார். உலகத்தரத்தில் கிரிக்கெட் மைதானம் கோவையில் அமைக்கப்படும் என்ற இந்த வாக்குறுதி தி.மு.க தேர்தல் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது.