sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

எழுத்தாளர்கள் மனதுக்குள் நடிப்பவர்கள்! அழகாக சொல்கிறார் சந்திரகுமார்

/

எழுத்தாளர்கள் மனதுக்குள் நடிப்பவர்கள்! அழகாக சொல்கிறார் சந்திரகுமார்

எழுத்தாளர்கள் மனதுக்குள் நடிப்பவர்கள்! அழகாக சொல்கிறார் சந்திரகுமார்

எழுத்தாளர்கள் மனதுக்குள் நடிப்பவர்கள்! அழகாக சொல்கிறார் சந்திரகுமார்


ADDED : மே 11, 2024 11:26 PM

Google News

ADDED : மே 11, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை நீலிக் கோணம் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் எழுத்தாளர் சந்திரகுமார். இவர் எழுதிய 'லாக்கப்' என்ற நாவலை, இயக்குனர் வெற்றிமாறன் 'விசாரணை' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்.

இந்த படம், சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச விருதை பெற்றது. தொடர்ந்து கதைகள் எழுதி வரும் இவர், இப்போது சினிமாவில் நடித்து வருகிறார். 'யாத்திசை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இப்போது விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தில், முக்கிய பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். எழுத்தாளர் சந்திரகுமாருடன் பேசிய போது, தனது நடிப்பு அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

எத்தனை படங்களில் நடித்து இருக்கிறீர்கள்?

இதுவரை எட்டுப்படங்களில் நடித்து இருக்கிறேன். ஆறு படங்கள் வெளி வந்துள்ளன. யாத்திசை படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தேன்.

இப்போது 'தங்கலான்' படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறேன்.

தங்கலான் படத்தில் நடித்ததை பற்றி சொல்லுங்களேன்?

தங்கலான் படத்தில் நடித்தது, என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு அனுபவமாகும்.

இன்றைக்கு தமிழ் சினிமாவின், மிக முக்கியமான இயக்குனர் பா.ரஞ்சித். அவரது படங்களில் தங்கலான் முக்கியமான படம்.

அதில் விக்ரம், பசுபதி போன்ற நடிகர்களுடன் சேர்ந்து, முனியன் என்ற கேரக்டரில் நானும் நடித்து இருக்கிறேன். இதை எனக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாக நினைக்கிறேன்.

தங்கலான் கதைக்களம் என்ன?

அந்த கதையை இப்போது சொல்ல முடியாது. பெரும்பாலான படிப்பிடிப்பு கோலார் தங்க வயல் பகுதியில் தான் நடந்தது. வரலாற்றை ஒட்டிய புனைவுதான் இந்த கதை. 1870 ஆண்டுகளில் விழுப்புரம் மாவட்டத்தில், வேப்பேரி என்ற கிராமத்தில் கிடைத்த ஒரு கல்வெட்டை அடிப்படையாக வைத்து, தங்கலான் என்பவர் தன் குழுவுடன் கோலார் தங்கவயலை நோக்கி பயணம் செய்கிறார். அவரின் பயண அனுபவம்தான் இந்த படம்.

ஒரு எழுத்தாளரான நீங்கள், நடிகரான அனுபவம் பற்றி?

எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் கதைகளுக்காக,பல கதாபாத்திரங்களை உருவாக்கி அந்த பாத்திரங்களாக மாறி, மனதுக்குள் நடிப்பார்கள். நானும் அப்படித்தான். என் கதைகளின் பாத்திரங்களாக மனதுக்குள் நடித்துக் கொண்டு இருந்தேன். இப்போது, சினிமாவில் இயக்குனர்கள் கொடுக்கும் கதா பாத்திரங்களை ஏற்று, வெளியில் நடிக்கிறேன். இந்த இரண்டு அனுபவங்களும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

இப்போது என்ன எழுதி கொண்டு இருக்கிறீர்கள்?

கொரோனா காலம் பற்றிய, ஒரு நாவலை எழுதி முடித்து விட்டேன். 'முது மக்கள் தாழி' என்ற நாவல் முடியும் நிலையில் உள்ளது. விரைவில் வெளியிட இருக்கிறேன்.






      Dinamalar
      Follow us