/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.239 சந்தா செலுத்தினால் ரூ.7 லட்சம் காப்பீடு பெறலாம்
/
ரூ.239 சந்தா செலுத்தினால் ரூ.7 லட்சம் காப்பீடு பெறலாம்
ரூ.239 சந்தா செலுத்தினால் ரூ.7 லட்சம் காப்பீடு பெறலாம்
ரூ.239 சந்தா செலுத்தினால் ரூ.7 லட்சம் காப்பீடு பெறலாம்
ADDED : மார் 09, 2025 11:46 PM
கோவை; தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் ரூ.239 ஆண்டு சந்தா செலுத்தினால், ரூ.7 லட்சம் காப்பீடு பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற, தென்னை வளர்ச்சி வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு, 'கெரா சுரக் ஷா' காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் தொடர்பாக, தென்னை வளர்ச்சி வாரிய மண்டல இயக்குனர் அறவாழி கூறியதாவது:
தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள், தென்னை கலப்பின பயிற்சி பெறுவோர், நீரா பான தொழிலாளர்கள் ஆகியோர், இக்காப்பீட்டு திட்டத்தில் இணையலாம். ஆண்டு சந்தா ரூ.956. இதில், 75 சதவீதத்தை வாரியமே செலுத்தி விடும். பயனாளிகள், ரூ.239 செலுத்தினால் போதும்.
மரணம், நிரந்தர முடக்கம் ஆகியவற்றுக்கு, ரூ.7 லட்சம், நிரந்தரமான பகுதி ஊனத்துக்கு ரூ.3.5 லட்சம், மருத்துவ செலவுக்கு ரூ.2 லட்சம், ஆம்புலன்ஸ் செலவு, வாராந்திர இழப்பீடு, இறுதிச் சடங்கு என ஒவ்வொன்றுக்கும், காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
விண்ணப்பங்களை, http://www.coconutboard.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பங்களை, 'தென்னை வளர்ச்சி வாரியம், மண்டல அலுவலகம், 248 ஜி.வி.ரெசிடென்சி, சவுரிபாளையம், கோவை, 641028' என்ற முகவரியில் நேரிலோ, தபால் வாயிலாகவோ சேர்ப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, id-ro-chennai@coconutboard.gov.in என்ற மின்னஞ்சல் அல்லது, 0422 2993684 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.