/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதுார் ஊராட்சியில் இனி 'ஊத' முடியாது
/
மருதுார் ஊராட்சியில் இனி 'ஊத' முடியாது
ADDED : ஆக 16, 2024 08:17 PM
மேட்டுப்பாளையம்:மருதூர் ஊராட்சி சின்னட்டியூரில், கிராம சபைக்கூட்டம் தலைவர் பூர்ணிமா தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், மருதூர் ஊராட்சியை புகையிலை இல்லா ஊராட்சியாக மாற்ற வேண்டும். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, புகையிலை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். கடைகள், தெருக்களில் சிகரெட், புகையிலை விற்பனையை தடுக்க வேண்டும். குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புக்கு முக்கியத்துவம் வழக்க வேண்டும்.
பழுதடைந்த வீடுகளை சரி செய்ய, உதவித் தொகை கோரி விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் அதற்கான உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா மாறுதல் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் இ-- சேவை வாயிலாக வழங்க வழிகாட்டுதல்கள் வழங்கப்படும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

