ADDED : ஜன 22, 2025 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்,; கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் பின்புறத்தில் சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பு ஒன்று வந்தது.
இதையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைப் பாம்பை மீட்டு, சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட அடர் வனப்பகுதியில் விடுவித்தனர்.

