/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் சீரமைப்பு பணிக்கு 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
/
கோவில் சீரமைப்பு பணிக்கு 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
கோவில் சீரமைப்பு பணிக்கு 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
கோவில் சீரமைப்பு பணிக்கு 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
ADDED : டிச 26, 2025 06:31 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கோதவாடியில் உள்ள மாரியம்மன் கோவில் புனரமைப்பு பணிக்கு ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சியில் உள்ள மாரியம்மன், விநாயகர் கோவில் கட்டப்பட்டு, 100 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், சரியான பராமரிப்பு பணிகள் செய்யப்படாததால் ஆங்காங்கே கோபுர சிற்பங்களும், கோவிலில் ஒரு சில பகுதிகளும் சிதிலமடைந்து காணப்பட்டது.
கோவிலில் திருப்பணி மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலை ஆய்வு செய்து, 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மதிப்பீடு தயார் செய்தனர். மேலும், இக்கோவிலை நலிவடைந்த கோவில் வரிசையில் சேர்த்து திருப்பணி மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து, தற்போது இந்த கோவிலில் பணிகள் மேற்கொள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

