/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்டேட் தொழிலாளர் பிரதிநிதி தேர்தல் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளிய தி.மு.க.
/
எஸ்டேட் தொழிலாளர் பிரதிநிதி தேர்தல் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளிய தி.மு.க.
எஸ்டேட் தொழிலாளர் பிரதிநிதி தேர்தல் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளிய தி.மு.க.
எஸ்டேட் தொழிலாளர் பிரதிநிதி தேர்தல் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளிய தி.மு.க.
ADDED : டிச 26, 2025 06:31 AM
வால்பாறை: எஸ்டேட் தொழிலாளர் பிரதிநிதி தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர்.
வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில், தொழிலாளர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில், ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தொழிலாளர் பிரதிநிதி தேர்தல் நடத்தப்படுகிறது. நிரந்தரமாக பணிபுரியும் தொழிலாளர்கள், தொழிலாளர் பிரதிநிதி தேர்தலில் ஓட்டு போடுகின்றனர்.
இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள ேஷக்கல்முடி, புதுக்காடு ஆகிய எஸ்டேட்களில் தொழிலாளர் பிரதிநிதி தேர்தல் நடந்தது. தேர்தலில் அ.தி.மு.க., -- தி.மு.க.,- ஐ.என்.டி.யு.சி., -- வி.சி., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ேஷக்கல்முடி கீழ் பிரட்டு டிவிஷனில் நடந்த தேர்தலில் பேபிராணி (அ.தி.மு.க.,), கணேசன் (ஐ.என்.டி.யு.சி.,), ஆண்டவர், பேபி (வி.சி.,) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ேஷக்கல்முடி மேல்பிரட்டு டிவிஷனில் மணிமாறன் (ஐ.என்.டி.யு.சி.,), காமராஜ் (வி.சி.,) ஆகியோர் வெற்றி பெற்றனர். மேற்பார்வையாளருக்கான பிரதிநிதி தேர்தலில் அ.தி.மு.க.,வை சேர்ந்த அந்தோணிசாமி வெற்றி பெற்றார்.
இதே போல், புதுக்காடு எஸ்டேட்டில் நடந்த தேர்தலில் சங்கர், செல்வராஜ், சிந்து (தி.மு.க.,) ஆகியோர் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வால்பாறை நகரில் உள்ள அந்தந்த தொழிற்சங்க தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சமபலம் பு துக்காடு எஸ்டேட்களில், தொழிலாளர் பிரதிநிதி தேர்தலில் கீதா (தி.மு.க.,), மூக்கம்மாள் (அ.தி.மு.க.,) ஆகியோர் தலா எட்டு ஓட்டுக்கள் பெற்றனர். இதனால், யார் வெற்றி பெற்றது என்று அறிவிக்க முடியாத நிலையில், இருவரும் தலா மூன்று ஆண்டுகள் தொழிலாளர் பிர திநிதியாக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இரு கட்சியினரும் வெற்றியை கொண்டாடினர்.

