/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை மாத்திரை விற்ற 10 பேர் கைது
/
போதை மாத்திரை விற்ற 10 பேர் கைது
ADDED : நவ 21, 2024 11:20 PM

கோவை; கோவை கரும்புக்கடை பகுதியில் போதை மாத்திரை, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பத்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை கரும்புக்கடை பகுதியில் வாலிபர்கள் சிலர் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆத்துப்பாலம் சுண்ணாம்பு காளவாய், ஆசாத் நகர் மைதானம் பகுதியில் சிலர் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து, 510 வலி நிவாரணி மாத்திரைகள், கஞ்சா, ஊசி உள்ளிட்டவை பறிமுதல் செய்து, விசாரித்தனர். சேலத்தை சேர்ந்த பிரகாஷ் கஞ்சா வழக்கில் மூன்றாண்டு சிறையில் இருந்துள்ளார்.
அப்போது, சிறையில் போதை மாத்திரை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து குஜராத்தை சேர்ந்தவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் சிறையில் இருந்து வெளிவந்த பிரகாஷ், குஜராத் நபரை தொடர்பு கொண்டார். பின்னர், அவரிடம் இருந்து போதை மாத்திரைகளை கூரியர் மூலம் வாங்கி விற்பனை செய்து வந்தார். அவரிடம் இருந்து, கோவையை சேர்ந்த வாலிபர்கள் மாத்திரைகளை வாங்கி வந்து இங்குள்ள இளைஞர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சேலத்தை சேர்ந்த பிரகாஷ், கோவையை சேர்ந்த முஜிபுர் ரகுமான், நவுபல், முகமது சபீர், முஜிப், ரிஸ்வான், மன்சூர், சனுாப், அனீஸ், சர்ச்சு ஆகிய பத்து பேரை கைது செய்தனர்.