ADDED : டிச 10, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; கோவை மாநகரில், பழைய தாழ்தள பஸ்களுக்கு மாற்றாக, புதிய தாழ்தள பஸ்கள் இயக்கப்படுகிறது. மொத்தம், 100 பஸ்கள், ராஜஸ்தானில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த புதிய பஸ், ஆட்டோமெட்டிக் சிஸ்டமாக உள்ளது.
இவை தற்போது, பொள்ளாச்சியில் உள்ள போக்குவரத்து கழக புதுப்பித்தல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு, பஸ் சேஸ் எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்படும். அதன்பின், கோவை சென்று ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவு செய்து, எண் பெறப்பட்ட பின், கோவை மாநகரில் வலம் வரும். இதற்காக பொள்ளாச்சிக்கு பஸ்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

