/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு; 91 மையங்களில் ஏற்பாடுகள் தீவிரம்
/
10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு; 91 மையங்களில் ஏற்பாடுகள் தீவிரம்
10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு; 91 மையங்களில் ஏற்பாடுகள் தீவிரம்
10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு; 91 மையங்களில் ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : பிப் 18, 2025 09:50 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்காக, 91 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு முன்பாக, மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு, 22ல் துவங்கி 28ம் தேதி முடிகிறது. இதற்கென, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 91 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எதிர்கொள்ள உள்ளனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
செய்முறை தேர்வை நடத்துவதற்கு ஏதுவாக முதன்மைக் கண்காணிப்பாளர், புறத்தேர்வாளர்கள், அகத்தேர்வாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோர் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
மேலும், மாணவர் எண்ணிக்கை அதிகம் கொண்ட பள்ளிகளில், காலை மற்றும் மதியம் என இரு பிரிவுகளாக செய்முறைத்தேர்வு நடத்தப்படும். தேர்வு முடிந்தவுடன் திருத்தம் செய்து மதிப்பெண்கள், 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டும் வருகிறது. செய்முறை தேர்வுகளை நடத்த ஆய்வகங்களை தயார் நிலையில் வைத்திருக்க, பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வு முடிந்ததும், பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பலவீனமான மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி அவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும்.
நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, முழு மதிப்பெண் பெறவும், பள்ளியானது 100 சதவீதம் தேர்ச்சி பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.