sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

10ம் வகுப்பு; சமூக அறிவியல் தேர்வு ரொம்ப ஈஸி! மாணவர்கள் மகிழ்ச்சி

/

10ம் வகுப்பு; சமூக அறிவியல் தேர்வு ரொம்ப ஈஸி! மாணவர்கள் மகிழ்ச்சி

10ம் வகுப்பு; சமூக அறிவியல் தேர்வு ரொம்ப ஈஸி! மாணவர்கள் மகிழ்ச்சி

10ம் வகுப்பு; சமூக அறிவியல் தேர்வு ரொம்ப ஈஸி! மாணவர்கள் மகிழ்ச்சி


ADDED : ஏப் 15, 2025 08:29 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 08:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-- நிருபர் குழு -

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத் தேர்வில் இடம்பெற்றிருந்த வினாக்கள், மிகவும் எளிமையாக இருந்தது என, மாணவர்கள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 50 மையங்களில், பத்தாம் வகுப்பு, சமூக அறிவியல் பாடத்துக்கான பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுதிய மாணவர்கள், அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தது என, தெரிவித்தனர்.

தேர்வு குறித்து லதாங்கி வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கருத்து வருமாறு:

ஐஸ்வர்யா: அனைத்து வினாக்களும் எளிதாக இருந்தன. இரண்டு மதிப்பெண் கட்டாய வினா, புத்தகத்தின் உள்வினாவாக அமைந்திருந்தது. இதேபோல, நெடுவினாக்களும் எளிதாக இருந்ததால், விரைந்து தேர்வு எழுதினேன். ஆசிரியர் அளித்த தொடர் பயிற்சியால், அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் எழுதியுள்ளேன். முழு மதிப்பெண் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.

ரித்திஸ்: ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண், எட்டு மதிப்பெண் வினாக்கள் மற்றும் வரைபட வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தது. இரண்டு மதிப்பெண் கட்டாய வினா, புத்தக உள்வினாவாக இருந்தாலும் பதில் எழுதும்படி இருந்தது. வினாத்தாளில் இடம்பெற்றிருந்த அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் எழுதியுள்ளதால், அதிக மதிப்பெண் கிடைக்கும்.

* கிணத்துக்கடவு கிட்ஸ் பார்க் பள்ளி மாணவர்கள் கருத்து:

திரேகா: சமூக அறிவியல் தேர்வு எளிமையாக இருந்தது. அரை மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு எழுதி முடித்தேன். இரண்டு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டிருந்த கட்டாய வினா, சற்று கடினமாக இருந்தது. மற்ற அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தது. அதிக மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

கலையரசன்: சமூக அறிவியல் தேர்வு எளிமையாக இருந்தது. அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுதி உள்ளேன். இரண்டு மதிப்பெண் வினா ஒன்று மட்டும் சிரமமாக இருந்தது. ஆனாலும், யோசித்து சரியான பதில் எழுதி உள்ளேன். 15 நிமிடத்திற்கு முன்பாக தேர்வு எழுதி முடித்தேன். இந்தத் தேர்வில் நிச்சயம் சென்டம் மதிப்பெண் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

* வால்பாறைஅரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் கருத்து:

கன்யாஸ்ரீ: சமூக அறிவியல் தேர்வை பொறுத்த வரை, எதிபார்த்ததை விட எளிமையாக வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. பள்ளியில் நடந்த திருப்புதல் தேர்வில் அதிகளவில் கேட்கப்பட்ட வினாக்கள் இடம் பெற்றிருந்ததால், தயக்கமின்றி தெளிவாக தேர்வு எழுதியுள்ளேன். ஐந்து மதிப்பெண்களுக்கான சில வினாக்கள் மட்டும் கடினமாக இருந்தன. எதிர்பார்த்த வினாக்கள் கேட்கப்பட்டதால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.

கமலி: சமூக அறிவியல் தேர்வில் எதிர்பார்த்தபடி வினாக்கள் எளிமையாக இருந்தன. படித்த பாடங்களில் இருந்தும், பயிற்சியின் போது ஆசிரியர்கள் சொல்லித்தந்த பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால், தேர்வை நல்ல முறையில் தெளிவாக எழுதியுள்ளேன். கட்டாய வினாக்களில் சில கடினமாக இருந்தாலும், பிற வினாக்கள் எளிமையாக இருந்ததால், தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளேன்.

* உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் கருத்து:

விகாஷினி: சமூக அறிவியல் தேர்வு மிகவும் ஈஸியாக இருந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில் மட்டும் வினாக்கள் சிறிது குழப்பமாக இருந்தது. எட்டு மதிப்பெண் வினாக்களும் சுலபமாக இருந்தது. விடைகளை எழுதுவதற்கு அதிக நேரம் கிடைத்தது.

ப்ரியதர்ஷினி: சமூக அறிவியல் தேர்வு எளிமையாக இருந்தது. அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் தான் அதிகம் கேட்கப்பட்டிருந்தன. இதனால், விடைகளை எளிமையாக எழுத முடிந்தது. இரண்டு, மூன்று மதிப்பெண், நெடுவினா பகுதிகளிலும் வினாக்கள் நேரடியாகவே கேட்கப்பட்டிருந்தன. இதனால், தேர்வை நல்ல முறையில் எழுதி உள்ளேன். முழு மதிப்பெண் கிடைக்கும்.






      Dinamalar
      Follow us