/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
11 நாட்கள் நடந்த போராட்டம் வாபஸ்; பணிக்குத் திரும்பும் வருவாய்த்துறையினர்
/
11 நாட்கள் நடந்த போராட்டம் வாபஸ்; பணிக்குத் திரும்பும் வருவாய்த்துறையினர்
11 நாட்கள் நடந்த போராட்டம் வாபஸ்; பணிக்குத் திரும்பும் வருவாய்த்துறையினர்
11 நாட்கள் நடந்த போராட்டம் வாபஸ்; பணிக்குத் திரும்பும் வருவாய்த்துறையினர்
ADDED : மார் 09, 2024 08:20 AM

கோவை : பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால், கோவை மாவட்டத்தில், 11 நாட்கள் நடந்த வருவாய்த்துறை அலுவலர்களின் போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. வரும் திங்கட்கிழமை முதல் பணிக்குத் திரும்புகின்றனர்.
வருவாய்த்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், பிப்., 22, 23 மற்றும் 26ம் தேதி மூன்று நாட்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிப்., 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள், புறக்கணித்து, இருக்கையில் அமர்ந்திருந்தனர். கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த, 450 ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதன் காரணமாக, வருமானச் சான்று, ஜாதிச்சான்று, இருப்பிடச் சான்று உள்ளிட்ட சான்றுகள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது. லோக்சபா தேர்தல் பணியும் பாதிக்கக் கூடிய சூழல் நிலவியதால், அரசு தரப்பில் நேற்று பேச்சு நடத்தப்பட்டது.
அதில், கோரிக்கைகளை ஏற்பதாக தெரிவித்ததால், போராட்டம் வாபஸ் பெறுப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 11 நாட்கள் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது; வரும் திங்கட்கிழமை (11ம் தேதி) முதல், அலுவலர்கள் பணிக்கு திரும்புகின்றனர்.