/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
9 கி.மீ.,க்கு ரோடு சீரமைக்க 12 ஆண்டுகளாக போராட்டம்
/
9 கி.மீ.,க்கு ரோடு சீரமைக்க 12 ஆண்டுகளாக போராட்டம்
9 கி.மீ.,க்கு ரோடு சீரமைக்க 12 ஆண்டுகளாக போராட்டம்
9 கி.மீ.,க்கு ரோடு சீரமைக்க 12 ஆண்டுகளாக போராட்டம்
ADDED : அக் 12, 2025 10:27 PM
வால்பாறை;வால்பாறை அருகே, ஒன்பது கி.மீ.,க்கு ரோடு சீரமைக்க, கடந்த 12 ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர்.
வால்பாறை அருகே, உருளிக்கல் செக்போஸ்ட்டிலிருந்து, 9 கி.மீ., தொலைவில் உள்ளது மானாம்பள்ளி பவர்ஹவுஸ். இங்கு நுாற்றுக்கும் மேற்ப்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இந்நிலையில், உருளிக்கல் செக்போஸ்டிலிருந்து, மானாம்பள்ளி பவர்ஹவுஸ் வரையான ரோட்டை சீரமைக்க கோரி, கடந்த, 12 ஆண்டுகளாக பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'மானாம்பள்ளி எஸ்டேட் மற்றும் பவர்ஹவுஸ் பகுதியில் சிறுத்தை, யானை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இதனால், பகல் நேரத்தில் கூட ரோட்டில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட சென்று வர முடியாத நிலை உள்ளது. பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நலன் கருதி, நகராட்சி சார்பில் ரோட்டை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.