/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டச்சத்து உணவே சிறந்தது குழந்தைகளுக்கு விழிப்புணர்வு
/
ஊட்டச்சத்து உணவே சிறந்தது குழந்தைகளுக்கு விழிப்புணர்வு
ஊட்டச்சத்து உணவே சிறந்தது குழந்தைகளுக்கு விழிப்புணர்வு
ஊட்டச்சத்து உணவே சிறந்தது குழந்தைகளுக்கு விழிப்புணர்வு
ADDED : அக் 12, 2025 10:29 PM

பொள்ளாச்சி:பாடல்கள், நாடகம் மற்றும் விளையாட்டு வாயிலாக குழந்தைகள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் உட்கொள்வதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.
சமூக நலத்துறையின் சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக, குழந்தைகள், வளர் இளம் பருவப்பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தின் அவசியத்தை உணர்த்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் 'போஷன் மா'- ஊட்டச்சத்து மாதம் நிகழ்ச்சி, ராசக்காபாளையம் ஹனிபன்ச் பள்ளியில் நடந்தது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் மீனா முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, அங்கன்வாடி பணியாளர்கள் வாயிலாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு துரித உணவுகள் தவிர்க்கவும், சத்தான உணவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குறிப்பாக, அங்கன்வாடி பணியாளர்கள் பாடல்கள், நாடகம், விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தினர். அதன் வாயிலாக குழந்தைகளுக்கு, சத்துள்ள உணவுப் பொருட்களை கொடுப்பது அவசியம். உணவில் புரதம், கொழுப்பு, மாவுப் பொருள், வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகிய ஐந்து சத்துகள் இருக்க வேண்டும். இவை குறையாமல் இருந்தால், நோய் பாதிப்புகள் இன்றி நலமுடன் வாழ முடியும் என, தெரிவிக்கப்பட்டது.
முடிவில், 'எண்ணம் போல் வாழ்க்கை' அறக்கட்டளை நிறுவனர் நெல்சன், குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.