/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
1.20 லட்சம் பாக்கு நாற்றுகள் விற்பனைக்கு தயாரா இருக்கு
/
1.20 லட்சம் பாக்கு நாற்றுகள் விற்பனைக்கு தயாரா இருக்கு
1.20 லட்சம் பாக்கு நாற்றுகள் விற்பனைக்கு தயாரா இருக்கு
1.20 லட்சம் பாக்கு நாற்றுகள் விற்பனைக்கு தயாரா இருக்கு
ADDED : ஜூலை 04, 2025 10:25 PM
மேட்டுப்பாளையம்; கல்லாறு தோட்டக்கலை பண்ணையில், 1.20 லட்சம் பாக்கு மர நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில், தமிழக அரசின் கல்லாறு தோட்டக்கலை பண்ணை உள்ளது. 124 ஆண்டுகள் பழமையான இந்த பண்ணையில், தட்ப வெப்ப நிலை மிதமாக இருக்கும். எலுமிச்சை, கொய்யா, மாதுளை, பலா, திராட்சை, மங்குஸ்தான், துரியன், லிச்சி, ரம்புட்டான், மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், லவங்கப்பட்டை, பாக்கு போன்ற நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பண்ணை மேலாளர் அருண்குமார் கூறுகையில், ''நான்கு ஆண்டுகளில் பலன் தரக்கூடிய, ஒரு லட்சம் மொஹித் நகர் பாக்கு மர நாற்றுகள் மற்றும், 20 ஆயிரம் மங்களா பாக்கு மர நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன. ஒரு பாக்கு மர நாற்று விலை ரூ.20. காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். தொடர்புக்கு: 8526371711, 8778722484, 9629456181 எண்களை அழைக்கலாம்,'' என்றார்.-