/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்து மாதங்களில் 1,234 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: விதிமுறை மீறிய 295 கடைகள் 'குளோஸ்'

ADDED : நவ 02, 2025 10:22 PM
கோவை: கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் கடந்த, 10 மாதங்களில், 1,234 கிலோ புகையிலை சார்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உணவு பாதுகாப்புத்துறை மற்றும் போலீசார் இணைந்து, குட்கா, பான் மசாலா, வாசனை மற்றும் மெல்லும் வகையிலான புகையிலை பொருட்கள் விற்பனையை, தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக, நான்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடர் ஆய்வுகளின் கீழ், 1,234 கிலோ புகையிலை சார்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், விற்பனை செய்த கடைகளும் மூடப்பட்டுள்ளன.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''புகையிலை சார்ந்த பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. விற்பனை செய்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த, ஜன., முதல் செப்., வரை 260 கடைகள் மூடப்பட்டு அங்கு விதிமுறை மீறி விற்பனை செய்த 1,132 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அக்., மாதம் சிறப்பு ஆய்வுகள் மேற்கொண்டு, விதிமுறை மீறி விற்பனை செய்த 35 கடைகள் மூடப்பட்டு 102 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். கடந்த பத்து நாட்களில், 73.75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.