/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயிற்சி இருக்கு... முயற்சி இருந்தால் வெற்றி தான்! சிறப்பு வகுப்புகள் வரும் 5ம் தேதி துவக்கம்

ADDED : நவ 02, 2025 10:22 PM
கோவை:  குரூப் 2 மற்றும் குரூப் 2ஏமுதன்மை போட்டி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இணையவழி பயிற்சி ஆகியவை, வரும் 5ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கடந்த ஜூலை 15 அன்று, 'குரூப் 2'ல் 50 காலிப் பணியிடங்களுக்கும், 'குரூப் 2ஏ'ல் 595 காலிப்பணியிடங்களுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல்நிலை தேர்வு, செப்., 28ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது.
இந்நிலையில், குரூப்2 மற்றும் 2ஏ முதன்மை போட்டி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு, வரும் 5ம் தேதி, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்கப்பட உள்ளது.
சிறப்பான பயிற்றுநர்களால் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்பட உள்ளது. மையத்தில் ஸ்மார்ட் போர்டு, இலவச வைபை, அனைத்து போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி ஆகியவை உள்ளன. பயிற்சி வகுப்புகள், வாரத்தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் போன்றவற்றுடன் நடத்தப்பட உள்ளன.
https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து, இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மனுதாரர்கள், கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை, நேரடியாகவோ அல்லது studycirclecbe@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ, 93615 76081 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையலாம் என, கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.