/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிக்கடி மின் வெட்டு: வீடுகளில் மக்கள் அவதி
/
அடிக்கடி மின் வெட்டு: வீடுகளில் மக்கள் அவதி
ADDED : நவ 02, 2025 10:23 PM
போத்தனூர்: குறிச்சி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பிள்ளையார்புரம், ஹவுசிங் யூனிட், ரெட்டியார் காலனி, இந்திரா நகர், கஸ்தூரி நகர், முதலியார் வீதி, கருப்பராயன் கோவில், திருமறை நகர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில், ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வீடுகள், ஒரே மின் பீடரின் கீழ் வருகிறது.
இம்மின் வழித்தடத்தில், அடிக்கடி காலை நேரத்தில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் சமையல் பணி மேற்கொள்ள முடியாமல், பெண்கள் அவதிப்படுகின்றனர்.
இது மட்டுமின்றி, வீட்டினுள் பல பணிகளும் பாதிக்கப்படுகின்றன. தினமும் குறைந்தது நான்கு அல்லது ஐந்து முறை இதுபோல், மின்வெட்டு ஏற்படுகிறது.வார விடுமுறை தினமான நேற்று, இப்பிரச்னை அடிக்கடி ஏற்பட்டதால், மக்கள் பாடு திண்டாட்டமானது.
மின் வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, 'இன்று (நேற்று) போத்தனூர் வடக்கு பகுதியிலுள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டதால், மின்வெட்டு ஏற்பட்டது. மரம் விழுதல், கம்பிகள் உராய்வு போன்றவற்றாலும், மின் தடை ஏற்படும்' என்றார்.

