/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை - ராஜஸ்தான் சிறப்பு ரயில்
/
கோவை - ராஜஸ்தான் சிறப்பு ரயில்
ADDED : நவ 02, 2025 10:27 PM
கோவையிலிருந்து, ராஜஸ்தான் மாநிலம் மதார் வரை, வாரந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
கோவை - ராஜஸ்தானுக்கு, வியாழக் கிழமைகள் தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், வரும் 13, 20, 27 மற்றும் டிச., 4 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 2:30 மணிக்கு புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, காச்சிகுடா, நிஜாமாபாத், மல்காபூர், வதோதரா வழியாக, மூன்றாம் நாள் காலை 11:20 மணிக்கு, மதார் சந்திப்பை சென்றடையும்.
அதேபோல், மதார் சந்திப்பிலிருந்து, ஞாயிற்றுக் கிழமைகளில் அதாவது, வரும் 16, 23, 30 மற்றும் டிச., 7 ஆகிய தேதிகளில் இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு, நான்காவது நாள் காலை 8:30 மணிக்கு கோவை வரும்.

