ADDED : ஜூன் 24, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகம் வாயிலாக, தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த மனுதாரர்கள், தங்கள் சுய விபரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் பங்கேற்றனர். 48 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தேவையான ஊழியர்களை தேர்வு செய்தனர்.
ஆண்கள் 250, பெண்கள் 199, மாற்றுத்திறனாளிகள் 5 என, 454 மனுதாரர்கள் பங்கேற்றனர். இதில், ஆண்கள் 73, பெண்கள் 48, மாற்றுத்திறனாளிகள் மூவர் என, 124 பேர் பணி நியமனம் பெற்றனர். திறன் பயிற்சிக்கு மூவர் பதிவு செய்துள்ளனர்.