/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
126 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்
/
126 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்
ADDED : ஜன 01, 2026 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை போலீசார் நேற்று புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து சோதனை நடத்தினர்.
காட்டூர், ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, ரத்தினபுரி, பீளமேடு, சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் பெட்டி கடைகள், மளிகை கடைகள், டீக்கடைகளில் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
புகையிலை விற்ற ராமநாதபுரம் மலங்கன்குடி சுபாஷ், 28, சித்தாபுதுார் திருமுருகன், 27, வேலாண்டிபாளையம் காலேஷ், 44, சின்னியம்பாளையம் கோவிந்தராஜ், 60, சேலம் கரையாம்பாளையம் இப்ராஹிம், 53, கணபதி மணியகாரன்பாளையம் முருகேஷ்வரி, 44, புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் கார்த்திக், 25 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மொத்தம், 126.58 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

