/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தியவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
/
குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தியவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தியவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தியவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
ADDED : ஜன 01, 2026 05:03 AM
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூரில், குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்திய, பாக்கு ஷெட் உரிமையாளருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தொண்டாமுத்தூர் சுற்றுப்பகுதியில், 60க்கும் மேற்பட்ட பாக்கு ஷெட்கள் செயல்பட்டு வருகின்றன. வடமாநில தொழிலாளர்கள், குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதில், வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து, பாக்கு ஷெட்களில், கடந்த நவ., 20ம் தேதி ஆய்வு செய்தனர்.
தொண்டாமுத்தூர், கிழக்கு வீதியில் உள்ள பேபி,56 என்பவருக்கு சொந்தமான பாக்கு ஷெட்டில் 14 வயதிற்குட்பட்ட 5 சிறுவர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீண்டும் பள்ளியில் சேர, தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
தொழிலாளர் நலத்துறையினர் அளித்த புகாரின் பே ரில் தொண்டாமுத்தூர் போலீசார், பாக்கு ஷெட் உரிமையாளர் பேபி மீது வழக்குப்பதிவு செய்தனர். கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அவ்வழக்கின் விசாரணை முடிந்து பேபிக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மீட்கப்பட்ட ஐந்து குழந்தைகளும் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கான மறுவாழ்வு நிதியினை அரசிடமிருந்து பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது. குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிந்தால், அது குறித்து, https://pencil.gov.in/Users/login என்ற இணையதளத்திலும், 1098 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என, தொழிலாளர் நலத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

