/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒற்றை பெற்றோர் மாணவர் 500 பேருக்கு உதவி தொகை
/
ஒற்றை பெற்றோர் மாணவர் 500 பேருக்கு உதவி தொகை
ADDED : ஜன 01, 2026 05:03 AM
கோவை: தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மாதம் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பயனாளர்களை தேர்வு செய்ய, குழந்தைகள் பாதுகாப்பு துறையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கள ஆய்வு செய்து பரிந்துரைப்பதன் பேரில் தொகை 3 ஆண்டுகள் வழங்கப்படும்.
ஒற்றை பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயதுக்குள் இருத்தல் அவசியம்.
ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் இறப்பு சான்றிதழ், பள்ளியின் நன்னடத்தை சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
நிர்ணயித்த இலக்கான 500 பேரில், 250 மாணவர்களுக்கு ஏற்கனவே தொகை வழங்கப்படுகிறது. மீதி 250 பேரை தேர்வு செய்யும் பணி நடக்கிறது என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன என்றும் கூறினர்.

