/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் தடுக்கும் விருதுக்கு ஆர்வமில்லை 15 ஓட்டல்கள் மட்டுமே விண்ணப்பம்
/
பிளாஸ்டிக் தடுக்கும் விருதுக்கு ஆர்வமில்லை 15 ஓட்டல்கள் மட்டுமே விண்ணப்பம்
பிளாஸ்டிக் தடுக்கும் விருதுக்கு ஆர்வமில்லை 15 ஓட்டல்கள் மட்டுமே விண்ணப்பம்
பிளாஸ்டிக் தடுக்கும் விருதுக்கு ஆர்வமில்லை 15 ஓட்டல்கள் மட்டுமே விண்ணப்பம்
ADDED : ஜன 01, 2026 05:04 AM
கோவை: பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், அறிமுகப்படுத்தப்பட்ட விருது வழங்கும் திட்டத்தில், கோவை மாவட்டத்தில் வெறும், 15 விண்ணப்பங்களே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஹோட்டல்களில் உணவு பரிமாறவும், பார்சல் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தாமல் மக்கும் தன்மையுடைய பொருட்களை பயன்படுத்தும் உணவகங்களுக்கு ரொக்கப்பரிசுடன், விருதும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பெரிய உணவகங்கள் அதாவது, விற்றுக்கொள்முதல் 12 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பிரிவில் உள்ள உணவு வணிகர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசுடன் விருதும், சாலையோர சிறு வணிகர்களுக்கு, ரூ.50 ஆயிரத்துடன் விருதும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆக., மாதம் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால், விண்ணப்பிக்க ஹோட்டல்கள் பெரிதாக ஆர்வம் காண்பிக்கவில்லை.
15 விண்ணப்பங்கள்தான் கோவையில் ஸ்டார் அந்தஸ்து முதல் சாலையோர கடைகள் வரை, 3000க்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ள சூழலில், வெறும் 15 விண்ணப்பங்களே பெறப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களிலும் குறைவான விண்ணப்பங்களே பெறப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம், பிளாஸ்டிக்கினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து, கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
'பிளாஸ்டிக் மாற்று தேட
இது ஒரு நல்ல வாய்ப்பு'
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதாவிடம் கேட்டபோது, '' மாநில அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் இவ்விருது வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. பெறப்பட்ட 15 விண்ணப்பங்களை பரிசீலித்து வருகிறோம். பிப்., மாதம் விருது வழங்கப்படவுள்ளது. பிளாஸ்டிக் மாற்றை ஹோட்டல்கள் தேட இது ஒரு முன்னெடுப்பு. அடுத்தடுத்த ஆண்டுகளில், விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து மாற்று வழிகளுக்கு மாறுவது குறித்து ஹோட்டல்களுக்கு மட்டுமின்றி, அனைத்து உணவு சார்ந்த துறைகளுக்கும் அறிவுறுத்தி வருகிறோம், '' என்றார்.

