/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் 13 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை
/
கோவையில் 13 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை
ADDED : பிப் 15, 2025 07:53 AM
கோவை; கோவை மாவட்டம், வடவள்ளி, பாலாஜி பத்மாவதி நகரை சேர்ந்தவர் கோபால், 44; மனைவி வீராயி, 40. கோபால் கட்டட வேலை செய்து வருகிறார். வீராயி ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
தம்பதிக்கு நான்கு மகள்கள். முதல் மூன்று மகள்களுக்கு திருமணமாகி, கணவருடன் வசித்து வருகின்றனர். கடைசி மகள் துர்கா தேவி, 13, ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர், படிக்க விருப்பமில்லை எனக் கூறி, வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீராயி, கடந்த 12ம் தேதி, மருத்துவமனைக்கு உடன் வருமாறு துர்கா தேவியை அழைத்துள்ளார். அவர் மொபைல் போனை பார்த்துக்கொண்டிருந்ததால், செல்ல மறுத்து விட்டார். வீராயி, கோபத்தில் மகளை திட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்றார்.
அவர் திரும்பி வந்த போது, தான் விஷம் குடித்து விட்டதாக துர்கா தெரிவித்தார். அவரை வீராயி அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின், அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு துர்கா தேவியை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியின் தற்கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளதா என விசாரிக்கின்றனர்.

