/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
13 ஊராட்சிகள் ரூ 2.49 கோடி மின்சார கட்டணம் பாக்கி
/
13 ஊராட்சிகள் ரூ 2.49 கோடி மின்சார கட்டணம் பாக்கி
ADDED : ஏப் 25, 2025 11:11 PM
அன்னுார்: '13 ஊராட்சிகள், 2.49 கோடி ரூபாய் மின் கட்டணம் நிலுவை வைத்துள்ளதாக மின்வாரியம் புகார் தெரிவித்துள்ளது.
அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில் 189 கிராமங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஊராட்சியிலும், பொது கிணறு, ஆழ்துளை கிணறு ஆகியவற்றில் 20க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் உள்ளன. 200 க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் உள்ளன. ஊராட்சி அலுவலகம், இ-சேவை மையம், சமுதாய நலக்கூடம் என உள்ளாட்சிக்கு சொந்தமான பல கட்டிடங்கள் உள்ளன. இவற்றுக்கான மின் கட்டணம் செலுத்துவதில் நிலுவை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து மேட்டுப்பாளையம் கோட்ட மின்வாரிய நிர்வாக பொறியாளர், 'அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 'அன்னுார் ஒன்றியத்தில் 13 ஊராட்சிகள், இரண்டு கோடியே 49 லட்சத்து 31 ஆயிரத்து 610 ரூபாய் மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளன. இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உடனே செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன், 13 ஊராட்சிகள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 'உடனடியாக காலதாமதம் இல்லாமல் மின் கட்டண நிலுவை தொகையை செலுத்த வேண்டும்,' என அறிவித்துள்ளார்.

