/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கு 13ல் மாவட்ட கலைப்போட்டி
/
பள்ளி மாணவர்களுக்கு 13ல் மாவட்ட கலைப்போட்டி
ADDED : அக் 08, 2024 11:31 PM
பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலை போட்டிகள், கருமாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில், வரும் 13ம் தேதி நடைபெறுகிறது.
கலை பண்பாட்டுத்துறை, ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், பள்ளி மாணவ, மாணவியரின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், கலை போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், நடப்பு ஆண்டுக்கான, மாவட்ட கலை போட்டிகள், ஊத்துக்குளி ரோட்டிலுள்ள கருமாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளன.
ஐந்து முதல் 6 வயது; ஒன்பது முதல் 12 வயது; 13 முதல் 16 வயது என, மூன்று பிரிவுகளில், குரலிசை, பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம், ஓவிய போட்டிகள் நடத்தப்படுகிறது. பங்கேற்க விரும்பும் மாணவர்கள், பாஸ்போர்ட் அளவு போட்டோ, ஆதார் கார்டு நகல், படிக்கும் பள்ளியிலிருந்து சான்று ஆகிய வற்றை கொண்டுவந்து முன்பதிவு செய்யவேண்டும்.
குரலிசையில் கர்நாடக இசை பாடல்கள், தேசிய, சமூக பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், சமூக விழிப்புணர்வு பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். மேற்கத்திய இசை, சினிமா பாடல்கள், பிறமொழி பாடல், குழு பாடல்களுக்கு அனுமதியில்லை.
மாவட்ட அளவில், 9-12; 13-16 வயது பிரிவு கலை போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மா ணவர்கள், மாநில அளவிலான கலை போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.
போட்டி தொடர்பான மேலும் விபரங்களுக்கு, கோவை மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகத்தை, 0422 2610290, 96779 65555 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
- நமது நிருபர் -

