ADDED : ஜூன் 05, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சிறுவாணி அணை பகுதியில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணையில், 14 மி.மீ., அடிவாரத்தில், 10 மி.மீ., பதிவாகியிருந்தது. 39.13 அடியாக நீர் மட்டம் (மொத்த உயரம் - 50 அடி) உயர்ந்துள்ளது. 9.62 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு, கோவை மக்களுக்கு நேற்று வினியோகிக்கப்பட்டது.
மதுக்கரை தாலுகாவில், 2 மி.மீ., ஆழியார் - 5.20, சின்கோனா - 15, சின்னக்கல்லார் - 19, வால்பாறை - 17, சோலையார் - 14 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. மாவட்டத்தின் இதர பகுதிகளில் மழைப்பொழிவு இல்லை.