/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.1.48 கோடியில் தேர்நிலை மார்க்கெட்
/
ரூ.1.48 கோடியில் தேர்நிலை மார்க்கெட்
ADDED : செப் 30, 2024 11:09 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தேர்நிலையம் மார்க்கெட், கடந்த, 1971ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த மார்க்கெட்டில், காய்கறிகள், வாழை இலை, தேங்காய் கடைகள் உள்ளிட்ட, 100 கடைகள் உள்ளன. பொள்ளாச்சி மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த வியாபாரிகள், மக்களும் காய்கறிகள் வாங்க வந்து செல்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தேர்நிலையம் மார்க்கெட் புதுப்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.மழைக்காலங்களில் வியாபாரிகள், காய்கறிகளை விற்பனை செய்ய சிரமப்பட்டனர். எவ்வித வசதியுமின்றி செயல்படும் தேர்நிலையம் மார்க்கெட் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வியாபாரிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்நிலையில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தேர்நிலையம் மார்க்கெட், ஒரு கோடியே, 48 லட்சம் ரூபாய் செலவில் கட்டுமானப்பணிகள் கடந்தாண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்டன.
கட்டடம் இடிப்பதற்கு முன், அங்கிருந்த கடைகள் தெப்பக்குளம் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த, சந்தை கட்டுமான பணிகள் தற்போது தீவிரமாக நடக்கிறது.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'தேர்நிலையம் மார்க்கெட் புதுப்பிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. மொத்தம், 56 கடைகள் கட்டப்பட்டுள்ளன. பணிகள், 15 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன,' என்றனர்.