/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட சிலம்ப போட்டி 150 பேர் பங்கேற்பு
/
மாவட்ட சிலம்ப போட்டி 150 பேர் பங்கேற்பு
ADDED : ஜன 16, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடந்தது.
பொள்ளாச்சி சிவா தற்காப்பு கலைக்கூடம் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
பயிற்சியாளர்கள் சிவானந்தம், சூர்யநாராயணன், மணிகண்டன், செல்வக்குமார், சாமிநாதன், பிரபு முன்னிலை வகித்தனர்.
பல்வேறு வயதினருக்கான பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. மொத்தம், 150 பேர் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டி ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.