UPDATED : நவ 11, 2026 12:00 AM
ADDED : நவ 10, 2026 07:55 PM
கோவை: மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களை தடுக்க 249 ரவுடிகளை போலீசார் கண்காணித்தனர். 5 வழக்குகள் பதியப்பட்டு, 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீசார் கூறியதாவது:
போதைப்பொருள் குறித்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள், போலீசாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டவர்களில் 94 பேர் கண்காணிக்கப்பட்டனர். ஒரு வழக்கு பதியப்பட்டது. இதுதவிர 115 விடுதிகள், 63 பேயிங் கெஸ்ட் விடுதிகளில், 23 ல் சோதனை நடத்தப்பட்டது.
கொலை, தாக்குதல் வழக் குகளில் ஏற்கனவே தொடர்புடையவர்கள், சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையானவர்கள் உள்ளிட்ட 77 பேர் கண்காணிக்கப்பட்டனர். இதில் ஒரு வழக்கில் ஒரு வர் கைது செய்யப்பட்டார்.
மாவட்டம் முழுவதும் 2,433 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
மது குடித்து வாகனம் ஓட்டியவர்கள் மீது 108 வழக்குகள் பதியப்பட்டன. உரிய ஆவணங்கள் இல்லாத 30 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொது இடங்களில் மது அருந்தியதாக 121 பேர் மீது 115 வழக்குகள் பதியப்பட்டன.
