UPDATED : நவ 11, 2026 12:00 AM
ADDED : நவ 10, 2026 07:55 PM

அ நிறம் | அளவு
போத்தனூர்: போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், பயணியரை கவரும் வகையில் ரயில் கோச் ஓட்டல் அமைக்கப்படவுள்ளது.
இதற்காக சேலம் கோட்டம் சார்பில் டெண்டர் விடப்பட்டது. 11 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த வாரம் ரயில் கோச் ஒன்று, நஞ்சுண்டாபுரம் சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நுழைவாயிலின் அருகே இடதுபுறம் இறக்கப்பட்டது. அவ்விடத்தில் தண்டவாளம் அமைத்து கோச் நிறுத்தப்பட்டுள்ளது. கோச்சினுள் அமர்ந்து சாப்பிடும் வகையில் டேபிள், சேர் வைக்கப்படும். கார் பார்க்கிங் அருகே ஆயிரம் சதுரடியில் சமையலறை உள்ளிட்டவை அமையவுள்ளன. விரைவில் பயணியர், பொதுமக்கள் ரயில் ஓட்டலில் உணவை ருசி பார்க்கலாம்.
