/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
16 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள்; 'ஜியோ டேக்' செய்யும் பணிகள் தீவிரம்
/
16 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள்; 'ஜியோ டேக்' செய்யும் பணிகள் தீவிரம்
16 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள்; 'ஜியோ டேக்' செய்யும் பணிகள் தீவிரம்
16 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள்; 'ஜியோ டேக்' செய்யும் பணிகள் தீவிரம்
ADDED : ஏப் 18, 2025 06:35 AM
கோவை; மாநகரில் 'ஜியோ டேக்' செய்யாமல் உள்ள 16 ஆயிரம் கேமராக்களை 'ஜியோ டேக்' செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
குற்றச்சம்பவங்கள் நடந்தால், குற்றவாளிகளை போலீசார் கண்டறிவதற்கு சி.சி.டி.வி., கேமராக்கள் பயனுள்ளதாக உள்ளன. போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கின்றனர். ஆனால், சி.சி.டி.வி., கேமராக்கள் எங்கெல்லாம் உள்ளன என்பதை கண்டறிவது போலீசாருக்கு பிரச்னையாக இருந்தது.
அரசு, அரசு நிறுவனங்கள் மற்றும் போலீசாரின் அறிவுறுத்தலில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் எங்கு உள்ளன என்பது தெரியும். ஆனால், தனியார் சார்பில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்வது சிரமமாக இருந்தது.
இதற்கு தீர்வு காண, சி.சி.டி.வி., கேமரா விவரங்களை இணையதளத்தில் ஜியோ டேக் முறையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
மாநகரில் மொத்தம் 29 ஆயிரம் சி.சி.டி.வி., கேமராக்கள் உள்ளன. அதில், 2367 இடங்களில் உள்ள 13,728 கேமராக்கள் 'ஜியோ டேக்' செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மீதமுள்ள கேமராக்களை 'ஜியோ டேக்' செய்யும் பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். கேமராக்கள் அனைத்தும் 'ஜியோ டேக்' செய்து விட்டால் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கண்டறிய வசதியாக இருக்கும்.
இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவிக்கையில், ''கடந்த இரண்டு மாதங்களில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேமராக்கள் 'ஜியோ டேக்' செய்யப்பட்டுள்ளது. அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள போலீசார் அந்தந்த பகுதியில் உள்ள கேமராக்களை பதிவேற்றம் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மீதமுள்ள 16 ஆயிரம் கேமராக்கள் விரைவில் 'ஜியோ டேக்' செய்யப்படும். ரயில்வே டிராக் பகுதிகளை நோக்கி 160 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும், 'பைபர் ஆப்டிக்கல் கேபிள்கள்' பதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 'பைபர் ஆப்டிக்கல் கேபிள்' வந்துவிட்டால் அனைத்து கேமராக்களையும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்துக்கொள்ள முடியும்,'' என்றார்.