ADDED : செப் 30, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழைப்பொழிவு காணப்படுகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணையில் 18 மி.மீ., அடிவாரத்தில், 10 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. நீர் மட்டம், 40.70 அடியாக இருக்கிறது.
குடிநீர் தேவைக்காக, 9.73 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. கோவை மாவட்ட பகுதிகளில் இன்றும் (அக்., 1) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை மையம் அறிவித்திருக்கிறது.