/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
1983ம் ஆண்டு மாணவர்கள் கூடல்; மலரும் நினைவுகளில் நெகிழ்ச்சி
/
1983ம் ஆண்டு மாணவர்கள் கூடல்; மலரும் நினைவுகளில் நெகிழ்ச்சி
1983ம் ஆண்டு மாணவர்கள் கூடல்; மலரும் நினைவுகளில் நெகிழ்ச்சி
1983ம் ஆண்டு மாணவர்கள் கூடல்; மலரும் நினைவுகளில் நெகிழ்ச்சி
ADDED : மே 12, 2025 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே சீளியூரில் அரசு உதவி பெறும் தி துரைசாமி கவுடர் மேல்நிலைப் பள்ளியில், 1983ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் கூடல் விழா நடைபெற்றது. பள்ளி செயலாளர், தலைமை ஆசிரியர் மற்றும் 1983ம் ஆண்டில் கற்றுக் கொடுத்த ஆசிரியர் பெருமக்கள் ஆகியோருக்கு, விழா குழுவினர் நினைவு பரிசு வழங்கினர். மேலும், பள்ளி வளர்ச்சி நிதியாக ரூ.2 லட்சம், தலைமை ஆசிரியர் ராஜ்குமாரிடம் வழங்கப்பட்டது.
முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இவ்விழாவில் 60 பேர் கலந்து கொண்டனர்.--