/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2 கிலோ கஞ்சா பறிமுதல்; சப்ளையர் இருவர் கைது
/
2 கிலோ கஞ்சா பறிமுதல்; சப்ளையர் இருவர் கைது
ADDED : அக் 16, 2024 06:44 AM

வால்பாறை: வால்பாறையில், கஞ்சா பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை எஸ்.பி., உத்தரவின் பேரில், வால்பாறை இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் தனிப்பிரிவு காவலர்கள், வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, 300 கிராம் கஞ்சா பதுக்கிய நான்கு பேரை போலீசார் கடந்த, 12ம் தேதி கைது செய்தனர்.
இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த, தலைமறைவாக இருந்த நல்லகாத்து எஸ்டேட் பகுதியை சேர்ந்த சுபகார்த்தி, 20, என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், பெருந்துறையில் வசிக்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிசந்தாதந்தா,33, என்பவரை கைது செய்தனர். இருவரிடம் இருந்து, 2 கிலோ 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.