/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
200 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு
/
200 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு
ADDED : ஜன 24, 2025 11:15 PM

போத்தனூர்; கோவையில், நான்கு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட, 200 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.
கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் போலீசாரால் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கோர்ட்டில் வழக்கு முடிவடைந்த நிலையில், அவற்றை போலீசார் அழித்து விடுவது வழக்கம்.
அவ்வகையில், மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட, 200 கிலோ கஞ்சாவை அழிக்கும் நடவடிக்கை நேற்று நடந்தது.
போத்தனூர் அடுத்து செட்டிபாளையம் பகுதியில் உள்ள, மருத்துவ கழிவு அழிக்கும் நிறுவனத்தில் நேற்று முற்பகல், 11:30 மணிக்கு இப்பணி துவங்கியது.
கோவை சரக டி.ஐ.ஜி. சசிமோகன், எஸ்.பி., கார்த்திகேயன் முன்னிலையில் மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா, தீயிட்டு அழிக்கப்பட்டது. 25க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

