தங்க மோதிர திட்டத்துக்கு 2,215 மோதிரங்கள் தயார்!
தங்க மோதிர திட்டத்துக்கு 2,215 மோதிரங்கள் தயார்!
ADDED : செப் 20, 2026 05:53 PM
கோவை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தங்க மோதிரம் வழங்கும் திட்டம் 28ம் தேதி நடக்க உள்ளது. மோதிரங்கள் தயார் நிலையில் உள்ளன. மாவட்ட வாரியாக சேப்டி லாக்கர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவையில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில், சேப்டி லாக்கர் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு லாக்கருக்கும் ஏற்ப எல்லைகள் வரையறுக்கப்பட்டு மருத்துவமனைகள் பிரிக்கப்பட்டுள்ளன. பிரத்யேக நோடல் அதிகாரி தலைமையில் மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், ‘‘ தங்க மோதிர திட்டத்திற்கு இதுவரை, 2,215 பேர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துவக்க விழாவிற்கு பின், அரசு மருத்துவமனைகளிலே தேவையான ஆவணங்கள் பெறப்பட்டு, டிஸ்சார்ஜ் ஆகும் போது, மோதிரம் வழங்கப்படும்,’’ என்றார்.
