/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ., பொறியியல் கல்லுாரியில் 236 மாணவர்களுக்கு பட்டம்
/
பி.ஏ., பொறியியல் கல்லுாரியில் 236 மாணவர்களுக்கு பட்டம்
பி.ஏ., பொறியியல் கல்லுாரியில் 236 மாணவர்களுக்கு பட்டம்
பி.ஏ., பொறியியல் கல்லுாரியில் 236 மாணவர்களுக்கு பட்டம்
ADDED : ஏப் 07, 2025 08:52 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, புளியம்பட்டி பி.ஏ., பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லுாரியில், 13வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். துணைத் தலைவர் லட்சுமி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மணிகண்டன் வரவேற்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கலந்து கொண்டு, 236 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கி பேசுகையில், ''பட்டம் பெற்ற மாணவர்கள், புதிய பயணத்தை தொடங்க உள்ளனர். கனவுகளை நனவாக்க கல்வி மட்டுமல்ல, கடின உழைப்பு, நேர்மை, மற்றும் நிலைத்துப் போராடும் மனநிலை அவசியம்.
''தொழில்நுட்பம், புதிய எண்ணங்கள், மற்றும் சமூக பொறுப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, நல்ல மாற்றங்களை கொண்டுவர வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, முன்னாள் மாணவர் சங்க கூட்டம் நடத்தி கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. விழாவில், பி.ஏ., கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.