/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐந்து ஆண்டுகளில் 26 காப்புரிமைகள்: பாரதியார் பல்கலை தொடர்ந்து முன்னிலை
/
ஐந்து ஆண்டுகளில் 26 காப்புரிமைகள்: பாரதியார் பல்கலை தொடர்ந்து முன்னிலை
ஐந்து ஆண்டுகளில் 26 காப்புரிமைகள்: பாரதியார் பல்கலை தொடர்ந்து முன்னிலை
ஐந்து ஆண்டுகளில் 26 காப்புரிமைகள்: பாரதியார் பல்கலை தொடர்ந்து முன்னிலை
ADDED : பிப் 10, 2025 06:19 AM

கோவை: பாரதியார் பல்கலை அறிவுசார் காப்புரிமை சார்பில் கடந்த ஐந்து ஆண்டுகளில், 26 காப்புரிமை பெறப்பட்டுள்ளது.
மத்திய அரசு காப்புரிமை மையங்களை அனைத்து கல்வி நிறுவனங்களில் அமைக்கவும், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. கல்லுாரிகளுக்கான தேசிய தரவரிசை பட்டியலில், அதிக காப்புரிமை வைத்துள்ள கல்வி நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இதன் படி, கடந்த, 2016 ம் ஆண்டு பாரதியார் பல்கலையில் அறிவுசார் காப்புரிமை மையம் துவக்கப்பட்டது. மையம் மூலம் பல்கலை பேராசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்களுக்கு காப்புரிமை சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது.பல்கலையின் டெக்ஸ்டைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மருத்துவ இயற்பியல், உயிரியல், பயோ-டெக்னாலஜி, உயிர் வேதியியல், இயற்பியல், தாவரவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் வாயிலாக, புதிய கண்டுபிடிப்புகள் குறித்த ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், காப்புரிமைக்கும் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 26 காப்புரிமைக்கு விண்ணப்பித்த நிலையில், அனைத்துக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது
அறிவுசார் காப்புரிமை மைய இயக்குனர் சுமதி கூறியதாவது: காப்புரிமை சார்ந்த விழிப்புணர்வு தற்போது பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காப்புரிமைக்காக விண்ணப்பிப்பது அதிகரித்துள்ளது. பொதுவாக காப்புரிமை பெறுவதற்கு அதிகளவு கால அவகாசம் பிடிக்கிறது. இது முறையான நடைமுறையே.
காப்புரிமை பதிவு மற்றும் ஒப்புதலுக்கு, சென்னை, மும்பை, கொல்கத்தா, டில்லி ஆகிய நான்கு இடங்களில் காப்புரிமை அலுவலகங்கள் உள்ளன. தற்போது அனைத்து விண்ணப்பங்களுக்கும் விரைந்து ஒப்புதல் வழங்கப்படுகிறது. கடந்த, 2016 முதல் தற்போது வரை, 43 காப்புரிமைகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டன. அவற்றில், 27 காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் அண்ணா பல்கலை தவிர்த்து பிற பல்கலைகளை ஒப்பிடும் போது, பாரதியார் பல்கலை முன்னணியில் உள்ளது. தமிழகத்தில் காப்புரிமை பெற்றதில் பல்கலை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.