/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு அலுவலகத்தில் 2வது முறை திருட்டு
/
அரசு அலுவலகத்தில் 2வது முறை திருட்டு
ADDED : ஜன 22, 2025 07:48 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், கோவை ரோட்டில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில், இரண்டாவது முறையாக நடந்த திருட்டால் அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி- கோவை ரோட்டில், பொதுப்பணித்துறை முகாம் பிரிவு அலுவலக கட்டுப்பாட்டில் ஆய்வு மாளிகை உள்ளது. இந்த வளாகத்திற்குள், அரசு அலுவலர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் தங்குவதற்கான அறைகள் மட்டுமின்றி, உதவிசெயற்பொறியாளரின் அலுவலகம் செயல்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம், அலுலர்கள் வழக்கம்போல் சென்றபோது, செயற்பொறியாளர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தவிர, ஏ.சி., அவுட்டோர் யூனிட் திருடு போயிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த அக்., 31ம் தேதி இதே அலுவலக அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, இரண்டு லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை மர்மநபர்கள் திருடிச் சென்றிருந்தனர்.
அவர்கள் போலீசாரிடம் பிடிபடாத நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக நடந்த திருட்டு சம்பவத்தால், பொதுப்பணித் துறை அலுவலர்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர். மேலும், 'சி.சி.டி.வி., கேமரா' பொருத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

