/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடி பணியாளர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி வகுப்பு
/
அங்கன்வாடி பணியாளர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி வகுப்பு
அங்கன்வாடி பணியாளர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி வகுப்பு
அங்கன்வாடி பணியாளர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி வகுப்பு
ADDED : ஆக 06, 2025 07:51 PM

பொள்ளாச்சி; அங்கன்வாடிகளில் 'போஷன் பி, பதாய் பி' திட்டத்தின் கீழ், ஆரம்ப குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து அம்சத்தில் மட்டுமல்லாமல், குழந்தைகளின் ஆரம்ப கால கற்றலிலும் கவனம் செலுத்தும் வகையில் அங்கன்வாடி மையங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம், ஆனைமலை, வால்பாறை ஒன்றியங்களில் உள்ள பணியாளர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு, பொள்ளாச்சி தனியார் ஓட்டலில் நடத்தப்பட்டது. இதில், நுாறு அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவர் வீணா பங்கேற்று, ஊட்டசத்து வழங்கப்படுவதை உறுதி செய்தல், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு சத்து மாவு வழங்குதல், முன்பருவ கல்வியின் அவசியம், ஐந்து வயதிற்குள் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வகுப்பை நடத்தினார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சேரன், மாவட்ட திட்ட அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.