/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாய்கள் கடித்து குதறியதில் 30 கோழிகள் பலி
/
நாய்கள் கடித்து குதறியதில் 30 கோழிகள் பலி
ADDED : ஆக 03, 2025 09:17 PM

அன்னுார்; நாய்கள் கடித்து குதறியதில், பண்ணையில் இருந்த, 30 கோழிகள் பரிதாபமாக இறந்தன.
அன்னுார் அருகே எல்லப்பாளையம், கல்லாங்காடு தோட்டத்தைச் சேர்ந்தவர் தங்கமுத்து, இவர் 100க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கோழிகளை பண்ணையில் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கூட்டமாக வந்த நாய்கள், பண்ணையில் இருந்த கோழிகளை கடித்து குதறின. இதில் 30 கோழிகள் பரிதாபமாக இறந்தன.
இதுகுறித்து பண்ணை உரிமையாளர் தங்கமுத்து கூறுகையில், அரசின் மானியத் திட்டத்தில் நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வாங்கி வளர்த்து வந்தோம்.
ஒரே இரவில் நாய்கள் 30 கோழிக்குஞ்சுகளை கொன்று விட்டன. மேலும் பல கோழிகள் காயங்களுடன் உள்ளன.
கரியாம்பாளையம் மற்றும் காட்டம்பட்டி ஊராட்சிகளில், கோழி இறைச்சி கடை உரிமையாளர்கள் மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்தாமல் சாலையோரத்தில் வீசி விட்டுச் செல்கின்றனர். நாய்கள் அவற்றை உண்டு பழகி விட்டு அருகில் தோட்டங்களில் உள்ள கோழி, ஆடு ஆகியவற்றையும் கடிக்கின்றன.
சாலையோரத்தில் இறைச்சி கழிவுகளை வீசுவோர் மீது உள்ளாட்சி நிர்வாகங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இது குறித்து கால்நடை பராமரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.